ஒமிக்ரான் வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.!

ஒமிக்ரான் வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.!



tamilnadu-health-ministry-secretary-radhakrishnan-ias-w

வெளிநாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது. அதனால் மக்கள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்க நாடுகளில் பரவிவரும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ், வெளிநாடுகளில் அடுத்தடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிற்குள் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. 

மாநில அளவிலும் கடிதம் எழுதி, தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஓமிக்ரான் வகை வைரஸ் பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், "கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என்ற அலட்சியத்தால் பலரும் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய தவறான விஷயம். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வகை வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிற்குள் இது இன்னும் பரவவில்லை. 

Radhakrishnan IAS

எது எப்படி இருந்தாலும் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமான ஒன்றாகும். ஓமிக்ரான் வகை வைரஸ் வீரியம் மிகுந்தது. எதிர்விளைவுகள் அதிகம். உயிரிழப்பும் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், முதல் தவணை தடுப்பூசியை செலுத்தாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்கள், தமிழக அரசின் வழிகாட்டுதலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மழை காலமாக இருப்பதால் சுடவைத்து நீரை குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.