அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தமிழக பள்ளிகள் முழுவதுக்கும் ரூ. 50,000 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு! தமிழக அரசு வெளியிட்ட முக்கியஅறிவிப்பு .!!
தமிழக அரசு மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து புதுமையான கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தப் பட்டியலில் தற்போது மாணவர்களை சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுடன் இணைக்கும் வினாடி வினா போட்டி சிறப்பு கவனம் பெறுகிறது.
“சூழல் அறிவோம்” மாநில அளவிலான வினாடி வினா போட்டி
தமிழக அரசின் சார்பில் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்காக “சூழல் அறிவோம்” என்ற தலைப்பில் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி மாணவர்களுக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ச்சி போன்ற விஷயங்களில் அறிவை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. தகுதிகள் என்ன?.!
ரூ.50,000 வரை பரிசுகள் – நவம்பர் 5 கடைசி நாள்
இந்த போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் சார்பில் இரண்டு பேர் கொண்ட குழுவாக பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க நவம்பர் 5 (வரும் புதன்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் முறை
போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் https://www.tackon.org/soozhal என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு குழுக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவாற்றல், சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மற்றும் பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, தமிழகத்தின் கல்வித் துறையில் முக்கியமான மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?