உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அதிகபட்சமாக எவ்வளவு தொகை செலவு செய்யலாம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!Tamilnadu election commission announced election rules

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற19-ந் தேதி நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பாளர்கள் அதிகபட்சமாக எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

Tn government

அதன்படி சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்யலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 2-ம் நிலை மற்றும் முதல் நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.34 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 3-ம் நிலை நகராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.17 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.இந்த தேர்தல் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.