தமிழகம் Covid-19

கண்கலங்கவைக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை..! 7 ஆயிரத்தை நெருங்கியது..! இன்றைய பாதிப்பு மற்றும் மொத்த நிலவரம் இதோ.!

Summary:

Tamilnadu corona latest update

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5981 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

 தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பாதிப்பு நிலவரம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5981 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவை தடுத்துநிறுத்திய சீனா ...

சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1286 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்க்ளின்  எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 109 பேர் கொரோனா நோய் தொற்றினால்  உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக தமிழகத்தில் 5870 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,43,930 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement