தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா.? ஆலோசனை நடத்தவுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா.? ஆலோசனை நடத்தவுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!


tamilnadu cm will meeting with collectors

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு மார்ச் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் நான்காவது கட்டமாக இந்த மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்திலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனாலும் பொதுமக்களின் நலனுக்காக அதற்கு முன்பே ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

corona

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.