மீண்டும் அடுத்து ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் தமிழக முதல்வர்! என்ன காரணம் தெரியுமா?

மீண்டும் அடுத்து ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் தமிழக முதல்வர்! என்ன காரணம் தெரியுமா?


Tamilnadu Cm will go foreign again


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று விமானம் மூலம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஆலோசித்தார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், அடுத்தது அரசுமுறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்லவிருக்கிறோம்.

edapadi palanichami

ஏனென்றால் நாம் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை  7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். 

மேலும், இஸ்ரேலில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். நம் மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படுவதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.