நான் ரெடி.. நீங்க ரெடியா.? துரைமுருகனுக்கு சவால் விட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

நான் ரெடி.. நீங்க ரெடியா.? துரைமுருகனுக்கு சவால் விட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!


tamilnadu-cm-talk-about-dmk

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது முதலமைச்சர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திமுக சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் அறிக்கையில் முதல்வருக்கு சென்னையில் எதுவும் தெரியவில்லை, ஸ்டாலின் மேயராக இருந்தபோது நிறைய பாலம் கட்டினார் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கு தான் எதுவும் தெரியவில்லை. 

dmk

தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது. பொய்யான அறிக்கையை சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். ஊழலுக்கு சொந்தக்காரரே திமுக தான். சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார். துரைமுருகன் தயாராக உள்ளாரா? திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்தார்.