தமிழகம் Covid-19

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Summary:

tamilnadu cm talk about corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். இந்தநிலையில், கடலூருக்கு சென்ற முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, தொடங்கி வைத்தார். 

இதனையடுத்து அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement