என்னோட அம்மா இறந்து விட்டார்கள்.! எந்த மகனுக்கு இப்படி நடக்க கூடாது..! கலங்கிய மகனை நெகிழவைத்த முதல்வர்.!

என்னோட அம்மா இறந்து விட்டார்கள்.! எந்த மகனுக்கு இப்படி நடக்க கூடாது..! கலங்கிய மகனை நெகிழவைத்த முதல்வர்.!



tamilnadu-cm-replied-to-son-who-lost-his-mother

ஊரடங்கால் இறந்துபோன தனது அம்மாவின் இறுதி சடங்குக்கு கூட வரமுடியாமல் கண் கலங்கி நின்ற மகனுக்கு டிவிட்டரில் தமிழக முதல்வர் ஆறுதல் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அணைத்து போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் முக்கிய இறப்பு, இறுதி சடங்குகளுக்கு கூட மக்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், "என்னோட அம்மா இறந்து விட்டார்கள் ..!. ஆனா அவங்க இறுதி முகத்தை பார்க்க கூட முடியதவனாக இருக்கிறேன்..!
 வாழ்கையில் எந்த மகனுக்கு இப்படி நிகழ்வு நடக்க கூடாது..!" என வெளிநாட்டில் இருக்கும் நபர் ஒருவர் நேற்று டிவிட் செய்துள்ளார்.

corono

இந்த டிவிட்டர் பதிவு எப்படியோ தமிழக முதல்வரை சென்றடைய, "மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது தம்பி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் தங்கள் தந்தையும் மனோ தைரியத்துடன் இருங்கள்." என தமிழக முதல்வர் அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி டிவிட் செய்துள்ளார்.

இதேபோல் தனது கர்ப்பிணி மனைவியுடன் தான் இருக்கவேண்டும் என டிவிட்டர் மூலம் உதவி கேட்ட இளைஞருக்கு முதல்வர் பதிலளித்ததோடு, அந்த இளைஞருக்கு உதவியும் செய்தது குறிப்பிடத்தக்கது.