அரசியல் தமிழகம்

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முதல்வரின் அதிரடி அறிவிப்பு! இனி அரசு பள்ளிக்கு தனி மரியாதை!

Summary:

Tamilnadu cm announced for Govt school students

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு  வழங்கும் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் நடந்த நீட்தேர்வில் பங்கேற்ற தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால், நீட்தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சீட்டில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.
 


Advertisement