108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நிவாரணம்! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் 275 கோடி மதிப்பிலான ஏராளமான நல திட்டப்பணிகளை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தலா ரூபாய் 5000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.