அரசியல் தமிழகம்

கோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்.

Summary:

tamilnadu chief minister pazani samy - m.k stalin

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை கோரி ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்.

சமீபத்தில் தெஹல்கா பத்திரிக்கை ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற தொடர் கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தனியார் டி.வி சேனல்களில் காரசார விவாத நிகழ்ச்சியும் அரங்கேறியது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை டெல்லியில் வைத்து நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

Related image

முதல்வா் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கருத்து தொிவித்து வந்தாா்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்திக்க உள்ளாா். இந்த சந்திப்பின் போது கோடநாடு விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தொிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெறுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement