மின்சாரம் துண்டிக்கப்போறாங்க., பணம் செலுத்துங்க... மக்களே வடக்கன் கும்பல் புது ரூட்டாம்.. கவனமா இருங்க..!

மின்சாரம் துண்டிக்கப்போறாங்க., பணம் செலுத்துங்க... மக்களே வடக்கன் கும்பல் புது ரூட்டாம்.. கவனமா இருங்க..!


tamilnadu-chennai-cyber-crime-warning-online-frauds

சமீபமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலை அதிகளவில் செய்து வருகின்றனர். மேலும், இதற்காக பல யோசனை செய்து புதிய திட்டத்தையும் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மின்னிணைப்பு துண்டிக்கப்படும், பில் கட்டவில்லை என்ற பெயரில் வலைவிரிக்கின்றனர். 

வாட்ஸப்பிலேயே அனைத்தையும் செய்துவிடலாம் என்ற பெயரில் லிங்கை அனுப்பி அக்கும்பல் கைவரிசை காண்பிக்கிறது. இதுபோன்ற வதந்தி மற்றும் பணம் தொடர்பான விவகாரத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.