இன்றாவது மக்கள் மகிழ்ச்சி அடைவார்களா? 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

இன்றாவது மக்கள் மகிழ்ச்சி அடைவார்களா? 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!



tamilnadu - chennai - 15 district rain changes - vanilai viparam

கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் தென் மேற்கு பருவ காற்றால் நல்ல மழை பொழிவை பெற்று வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அரபிக் கடலின் பலப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது.  

இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பொழிவை பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வெப்பச்சலனம் மற்றும் பருவமழை காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் தாம்பரம், மேடவாக்கம், சிறுசேரி பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. நேற்றைய தினம் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகா், தியாகராயா நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

vanilai

ஆனால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இனிவரும் மழையாவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமா என்று ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாாி ஒருவர் கூறுகையில், பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.