நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்! அவரே கூறிய காரணம்!

நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்! அவரே கூறிய காரணம்!


tamilisai crying yesterday night


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 354 இடங்களில் அமோக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வென்றுள்ளது. 

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி, பாஜகவின் வெற்றிக்கு பின்பு அளித்த முதல் பேட்டியிலேயே, "கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழக மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே எனது முதல் பணி" என தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்!! என பதிவிட்டுள்ளார்.