பெண்களுக்கு தேர்வின்றி சூப்பர் வேலை.. தமிழகம் முழுவதும் 2,147 செவிலியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.!



Tamil Nadu MRB Recruitment 2,147 Village Health Nurse Posts

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,147 கிராம சுகாதார செவிலியர் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,147 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தொடங்கி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பின்படி, இந்த பதவிக்கு விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம். 

MRB Recruitment

பணி தொடர்பான விபரம்:

பணி நிறுவனம் - தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம்
காலிப்பணியிடங்கள் - 2,147 
பதவி - துணை செவிலியர், கிராம சுகாதார பதவிகள் 
கல்வித் தகுதி - 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பொது சுகாதார மற்றும் இரண்டு ஆண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி, துணை செவிலியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 
வயது - மேற்கூறிய பிரிவுகளுக்கு ஏற்ப வரம்பு மாறுபடும். 
தேர்வு முறை - மெரிட் லிஸ்ட் மற்றும் ஆவண சரிபார்ப்பு 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 14 டிசம்பர் 2025 
கூடுதல் விபரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ இணையதள பக்கத்தை காணவும்.

இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!

இதையும் படிங்க: SBI Bank Job: எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் வேலைவாய்ப்பு.. விபரம் இதோ.!