
திமுக ஆட்சிக்கு வந்தால் டவுன் பஸில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தால் டவுன் பஸில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைகிறது.
தமிழகத்தின் புதிய முதலைவராக ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றதும் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் திமுக தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தில் கையெழுத்திட்டார்.
இதனை அடுத்து பெண்கள் நாளை முதல் டவுன் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் இணையத்தில் பல்வேறு மீம்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
Advertisement
Advertisement