தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்!! எவற்றிக்கெல்லாம் அனுமதி? முழு தகவல் இதோ!!

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்!! எவற்றிக்கெல்லாம் அனுமதி? முழு தகவல் இதோ!!


tamil-nadu-corona-rules-from-may-24th

தமிழகத்தில் மே 24-ஆம் தேதி முதல் எந்த வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படும், பலர் உயிரிழந்துவருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் வரும் மே 24 வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசு மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீடித்துள்ளது. இந்த முறை அத்திவாசியா தேவைகளான மருந்துக்கடையில் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரம் பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்கவும், நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளியூர் செல்வதற்காக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

நாளை முதல் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய கடைகள், மருந்ததங்கள் மட்டுமே செயல்பட அனுமதி. பெட்ரோல் பங்க் வழக்கம்போல் செயல்படலாம். காய்கறி, பழங்கள் போன்றவை உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து விநியோகப்படும். கடைகள் திறக்கப்படமாட்டாது. ATM இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும்.

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.