தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பு மற்றும் மரணம்! பதறவைக்கும் மொத்த எண்ணிக்கை.

Summary:

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்றைய பாதிப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாளில் இருந்து அன்றாட பாதிப்பு நிலவரம் மற்றும் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்றுமட்டும் புதிதாக  5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு மற்றும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை:

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விவரம்:

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா மரணம் 10,120 ஆக உயர்ந்துள்ளது. இன்று சற்று ஆறுதல் தரும் விதமாக தமிழகம் முழுவதும் 5,357 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 5,91,811 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement