தமிழகம் Covid-19 Corono+

மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப போகிறதா? தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு நிலவரம்.

Summary:

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது மக்கள் மனதில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது மக்கள் மனதில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4410. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,148 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மொத்த மரணத்தின் எண்ணிக்கை 10,472 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரேநாளில் 5,055 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,22,458 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய தேதியில் 41,872 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement