தமிழகத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் என்ன.? இன்றுமட்டும் எவ்வளவு பாதிப்பு? இறப்பு தெரியுமா?

தமிழகத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் என்ன.? இன்றுமட்டும் எவ்வளவு பாதிப்பு? இறப்பு தெரியுமா?


Tamil Nadu corona count current status and report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,98,888 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,895 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்றைய தினத்தில் 1,276 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,76,878 ஆக உயர்ந்துள்ளது.