அச்சச்சோ.. இப்படியும் நடக்கிறது இரிடியம் மோசடி.. எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட சைலேந்திரபாபு.!

அச்சச்சோ.. இப்படியும் நடக்கிறது இரிடியம் மோசடி.. எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட சைலேந்திரபாபு.!


Sylendra Babu Awareness Video Iridium Scam Through Facebook Video

இரிடியம் மோசடியில் புதிய யுக்தியுடன் கும்பல் களமிறங்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மக்களிடம் பண்டைய காலத்து பொருள் என கூறி இரிடியம் தொடர்பான மோசடிகள் நடைபெற்று வருவது தொடர்கதையாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களை சேர்ந்தோரும் இதுதொடர்பான மோசடி கும்பல்களால் ஏமாற்றப்படுகின்றனர். 

இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிக்கும் காணொளியில், "புதுவிதமான இரிடியம் மோசடி தற்போது நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரூ.5 இலட்சம் முதலீடு செய்து 2 ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை பணம் சம்பாதிக்கலாம் என இரிடிய மோசடிப்பேர்வழிகள் சிலரை தொடர்புகொள்கிறார்கள்.

அவர்களின் பேச்சுக்களில் சிக்கும் நபர்களை தேர்வு செய்து, பல கட்டுக்கதைகளை கூறி பொருளை வாங்க முயற்சிக்க வைப்பார்கள். நாம் சிந்தித்து ரூ.1 இலட்சம் கொடுத்து வாங்கலாம் என்ற நிலைக்கு வந்ததும், பல காரணத்தை கூறி ரூ.5 இலட்சம் பறித்துக்கொள்வார்கள். 

இரண்டு ஆண்டுகள் கழிந்ததும் அவர்கள் கூறிய தொகையும் வராது, நீங்கள் முதலீடு செய்ததும் கிடைக்காது. அதனை கேட்டால் சென்னை வரை அழைத்து வந்து அதிகாரியை பார்க்கலாம் என நீங்கள் சோர்வடையும் வரை அங்கும்-இங்குமாக அலைக்கழித்து உங்களை நடுத்தெருவில் விட்டு செல்வார்கள். ஆகையால் இரிடியம் குறித்து உங்களிடம் பேசினால் காவல்துறையிடம் தெரிவியுங்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.