ஷாக் நியூஸ்! சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை! காரணம் என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்...



swiggy-zomato-delivery-issue-in-chennai

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி செயலிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களுக்கான விரைவான உணவு சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், Swiggy மற்றும் Zomato ஆகியவை ஹோட்டல்களுக்கு வித்யாசமான கமிஷன் கட்டணங்களை விதித்து வருகின்றன. மேலும், உணவு விற்பனைக்கு வரும் தொகை ஒரு வாரம் தாமதமாக கிடைக்கின்றதால், உணவகங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட பேக்கரி மற்றும் ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

நாமக்கலில் உணவு டெலிவரிக்கு தடை 

இந்த நிலைமையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் Swiggy, Zomato மூலம் உணவு டெலிவரி செய்யப்பட மாட்டாது என்று சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சமையல் எரிவாயு விலை குறைவு: மாதம் முதல்நாளே மகிழ்ச்சி செய்தி..!

இதுதொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று நடைபெறும் இந்த சந்திப்பில் எந்தவொரு சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், சென்னையிலும் swiggy மற்றும் zomato சேவைகள் தடை செய்யப்படும் என்ற எச்சரிக்கையை சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னம்மா.. இப்படி பண்ணலாமா... ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து சண்டை போட்ட பெண்! வைரலாகும் வீடியோ...