சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்ததை தாங்க முடியாமல் கோவையில் ரசிகர் தற்கொலை!

சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்ததை தாங்க முடியாமல் கோவையில் ரசிகர் தற்கொலை!


sushanth fan suicide

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்  நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு எதிரான படத்தில் நடித்த இவரே இத்தகைய விபரீத முடிவை எடுத்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suicide

கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதிதாஸ், இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்தநிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார்.

இதனையடுத்து, கணபதிதாஸ் கடிதம் எழுதி வைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கணபதி தாஸ் எழுதிய கடிதத்தில் நான் சுஷாந்த் பாயிடம் செல்கிறேன் என்று ஹிந்தியில் எழுதியிருந்தது.