அரசியல் தமிழகம் சினிமா

தமிழகத்தின் அடுத்த காமராஜர் சூர்யா தானா! பிறந்தநாளுக்காக இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

Summary:

Suriya birthday celebration with name of Kamarajar

1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாளில் பிறந்தவர் தமிழகத்தின் தன்னிகரற்ற முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர். இவர் தமிழகத்தின் முதல்வராக 1954 முதல் 1963 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். 

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைய அடித்தளம் இட்டவரே காமராஜர் தான். பள்ளியில் குழந்தைகளை அதிகம் சேர்க்க தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

இன்றைய சூழலில் அனைத்து மாநில மாணவர்களுடன் தமிழக மாணவர்களும் இணையாக போட்டிப் போட தற்போதைய கல்வி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. இதனால் இவருக்கு ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பும் சிலரிடம் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் காமராஜர் பிறந்த அதே ஜூலை மாதத்தில் பிறந்த நடிகர் சூர்யாவிற்கு நாளை ஜூலை 23 ஆம் தேதி பிறந்தநாள். தற்போது கல்வி கொள்கையில் மாற்றம் தேவை என குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவை முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஒப்பிட்டு #HBD_குட்டிகாமராஜர்_SURIYA என்ற ஹேஷ் டாக் மூலம் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Advertisement