செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து இழுத்து தாக்குதல்.! மறக்கவே முடியாது.. சுந்தர்.சி வேதனை.!

செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து இழுத்து தாக்குதல்.! மறக்கவே முடியாது.. சுந்தர்.சி வேதனை.!


sunthar c election canvas

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் பாஜக வேட்பாளராக உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்காக அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

2010 ல் அரசியலுக்கு வந்த குஷ்பூ, திமுக.,வில் இணைந்தார். பிறகு அந்த கட்சியில் இருந்து விலகிய குஷ்பூ காங்கிரசில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பிறகு அங்கிருந்து விலகிய குஷ்பூ, 2020 ல் பாஜக.,வில் இணைந்தார். தற்போது அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது பாஜக.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் சுந்தர் சி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, 2010ஆம் ஆண்டு எனது மனைவி தாக்கப்பட்டார். செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து இழுத்து அவரை தாக்கினர். அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.