தமிழகம் சினிமா

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்டிவி நிறுவனம் கொடுத்த நிவாரண உதவி!. தொகை எவ்வளவு தெரியுமா?

Summary:

Sun Tv Netwrk giving relief fund to Gaja affected peoples


கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான "சன் குழுமம்" கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 2 கோடி நிதி உதவி செய்துள்ளனர். அந்த பணத்தை சன் குழுமம் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்துள்ளனர்.


Advertisement