ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்! அவரது பெற்றோரின் கோரிக்கை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்! அவரது பெற்றோரின் கோரிக்கை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு!!


sujith mother got govt job

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த சுஜித் என்ற 2வயது குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை 25ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 

அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்பதற்கான தீவிரமாக பணிகள்  நடைபெற்ற நிலையில் குழந்தை உயிரிழந்திருந்து சடலமாக நிலையில் கடந்த மாதம் 29 ம் தேதி அதிகாலை, ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Sujith

மேலும் உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். நிலையில் தமிழக முதல்வர் அரசு தரப்பில் ரூ.10 லட்சமும், அதிமுக கட்சி சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் திமுக சார்பில் எதிர்கட்சிகள் சார்பில் சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சுர்ஜித்தின் பெற்றோர் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.அதனை தொடர்ந்து சுஜித்தின் தாய் கலாராணி பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளதால், அவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.