கள்ளக்காதலை விட்டுக்கொடுக்க முடியாத இருவர்கள்!. கடைசியில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு!. கள்ள காதலின் உச்சம்!.



suicide for illegal affairs


ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.

இது சுரேஷ்ஷின் மனைவி மாரியம்மாளுக்கு தெரியவந்ததையடுத்து, தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். ஆனாலும் தனது காதலை தொடர்ந்துள்ளார் சுரேஷ். இதனால் கோபமடைந்த மாரியம்மாள் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மரியம்மாவின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். 

மனைவி வீட்டை விட்டு சென்றதால் சுரேஷ்க்கு நல்ல வசதியாக போய்விட்டது. மனைவி இல்லாததால் தனக்கு தன்னை கேட்க ஆளில்லை என்றதும், சுரேஷ் அடிக்கடி ஜோதியை தனிமையில் சந்தித்துள்ளார்.

illegal affairs

இந்நிலையில், சுரேஷுக்கு ஜோதியுடன் ஏற்பட்ட பழக்கம் அவரது கணவர் சின்னசாமிக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக சின்னச்சாமி வீட்டிலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

சின்னச்சாமி வீட்டிலேயே இருந்ததால் ஜோதியால் சுரேஷை சந்திக்க முடியவில்லை. வழக்கம்போல சுரேஷை சந்திப்பதற்காக, தோட்டம் என்ற பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், ஜோதியுடன் பேசிக்கொண்டிருந்தார். 

அவர்கள் இருவரும் அங்கிருந்து வீடு திரும்பவில்லை மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்தில் சடலமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் செலுத்தியுள்ள்ளனர். இதனாலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர் என கூறப்படுகிறது.