வங்கக் கடலில் உருவாகும் புயல்.! தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட தகவல்

வங்கக் கடலில் உருவாகும் புயல்.! தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட தகவல்



Storm not affect tamilnadu

வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும்.

மேலும், அரபிக்கடலின் தென்கிழக்குப் பகுதி குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.