அரசியல் தமிழகம்

இதுதாங்க!! ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றதும் கையெழுத்திடும் முதல் திட்டம் இதுவாகத்தான் இருக்கும்!! எதிர்பார்ப்பில் மக்கள்

Summary:

ஸ்டாலின் இன்று முதல்வர் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ

ஸ்டாலின் இன்று முதல்வர் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட இருப்பதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றிபெற்றது தமிழகத்தில் ஆட்சி அமைகிறது. திமுக தலைவர் முக. ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார். கொரோனா காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையான முறையில் நடைபெறுகிறது.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு கோட்டைக்கு சென்று, அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் சில முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ. 4000 வழங்கும் திட்டத்தில் ஸ்டாலின் முதலாவதாக கையெழுத்திட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிகிறது.


Advertisement