காலை உணவு திட்டம்:  "பள்ளியில் நிரம்பி வழியும் கக்கூஸ்" - முதல்வர் ஸ்டாலினை கொந்தளிக்க செய்த நாளிதழ்!! 



Stalin against about the news of dinamalar

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த காலைஉணவு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாகும். மேலும், இந்த திட்டத்திம் குறித்து பலரும் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில், தினமலர் நாளிதழில் வெளியான செய்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

"உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். 

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!" என்று அவர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.