இரண்டு ஆசிரியர்கள் தந்த தொல்லை.! மாணவி ஸ்ரீமதி எழுதிய கடைசி கடிதம்.!

இரண்டு ஆசிரியர்கள் தந்த தொல்லை.! மாணவி ஸ்ரீமதி எழுதிய கடைசி கடிதம்.!


srimathi wirtten letter

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும்,  இறப்பிற்கு  பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

4வது நாளான நேற்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் தான் நன்றாக படிப்பதாகவும் ஆனால் கணிதம், வேதியியல் ஆசிரியைகள் தன்னை துன்புறுத்தியதாகவும் மாணவி கடிதத்தில் தெரிவித்துள்ளார். தான் சரியாக படிப்பதில்லை என டார்ச்சர் செய்ததாகவும், தன்னை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசியதாகவும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாணவி தற்கொலை தொடர்பாக நிர்வாகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.