கள்ளக்குறிச்சி: 8 வது நாளாக தொடரும் ஸ்ரீமதி விவகாரம்... உடலை பெற்று கொள்ள பெற்றோர் சம்மதமா...

கள்ளக்குறிச்சி: 8 வது நாளாக தொடரும் ஸ்ரீமதி விவகாரம்... உடலை பெற்று கொள்ள பெற்றோர் சம்மதமா...Srimathi parents receive body today

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்து இன்றுடன் எட்டு நாட்களை கடந்த நிலையில் தற்போது மாணவியின் பெற்றோர் உடலை பெற்று கொள்ள தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் தங்களது மகளின் உடலை பெற்றுக் கொண்டு இன்றே இறுதிச் சடங்கு செய்யவும், பகல் 2 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Kallakurichi

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி கனியாமூா் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி ஆகியோா் கொண்ட குழுவினா் முன்னிலையில் மறு உடல் கூறாய்வு மேற்கொண்டனா். இதில் மாணவியின் பெற்றோா் யாரும் பங்கேற்கவில்லை இதனால் மீண்டும் மாணவியின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.