இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.! 4 மாத கைக்குழந்தையுடன் நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் சிக்கித் தவித்த இலங்கை தமிழர்கள்.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.! 4 மாத கைக்குழந்தையுடன் நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் சிக்கித் தவித்த இலங்கை தமிழர்கள்.!


Sri Lankan Tamils ​​coming to Tamil Nadu as refugees

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு பால், உணவு, பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக படையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மாத கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்கள்  பைபர் படகில் புறப்பட்டு செவ்வாக்கிழமை அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கினர். இதனைப்பார்த்த அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த ஆறு இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து விசாரணைக்குப் பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்த 6 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல் படை கியூ பிரிவு மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.