பொங்கலுக்கு தொடர் விடுமுறை..! சொந்த ஊருக்கு கிளம்ப தயாராக இருக்கும் பொதுமக்கள்.! 16,768 சிறப்பு பேருந்துகள்

பொங்கலுக்கு தொடர் விடுமுறை..! சொந்த ஊருக்கு கிளம்ப தயாராக இருக்கும் பொதுமக்கள்.! 16,768 சிறப்பு பேருந்துகள்


special-bus-for-pongal-festival-WVUCM6

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்பும் பொதுமக்களுக்கு தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. அடுத்த நாள் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாள் தினம் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே தொடர்ச்சியாக விடுமுறை வரவுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறுகையில், ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அதாவது மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும். 

சென்னை தவிர பிற ஊரிகளில் இருந்து ஜனவரி 11ஆம் முதல் 13ஆம் வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.