பொங்கலுக்காக 19 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்.! எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையம்.?

பொங்கலுக்காக 19 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்.! எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையம்.?



special bus for pongal festival

சென்னையில் இருக்கும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் அவர்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஆண்டுதோறும் இயக்கிவருகிறது. இந்தநிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்காக 19 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

இந்த ஆண்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்குவது?, பயணிகளுக்கு செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிட்டதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல் 13/01/2021 வரையில், நாள்தோறும் இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்காக 17/01/2021 முதல் 19/01/2021 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில் 9,120 சிறப்பு பேருந்துகள் ஆகும்.
 
சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு செல்லும். அதன் விவரம் வருமாறு:-

மாதவரம் புதிய பேருந்து நிலையம் - செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்

கே.கே.நகர் பேருந்து நிலையம் - ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையம் - திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம் - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தசி செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம் - மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள்(மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர், பெங்களூரு)