தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர்!

தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர்!


special bus for diwali

சென்னையில் வாழும் 90 சதவிகித மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். அதிலும் தென் மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிப்பவர்கள் ஏராளமானோர்.இதனால் தான் தமிழகத்தில் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். 

விழாக்காலங்களில் சென்னையில் வசிப்பவர்கள், சொந்த ஊருக்கு செல்வதால் சென்னை விழாக்காலங்களில் வெறிச்சோடி காணப்படும். சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் அனைவரும் பண்டிகைகளை கொண்டாட ஒரே நேரத்தில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு கிளம்புவதால் பண்டிகைக்கு முன் இரண்டு மூன்று நாட்களுக்கு சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். 

கடந்தவருடம் தீபாவளிக்கு முதல் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 9 லட்சம் பேர் சென்னையில் இருந்துசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிட தக்கது.  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதனையடுத்து சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது, போக்கு வரத்து நெரிசல் இன்றி பேருந்துகளை இயக்குவது, முன்பதிவு ஆகியவை குறித்த கருத்துகளை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டு அறிந்தார்.

அந்த வகையில் அக்டோபர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 12575 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி இயக்கப்படும் 2,225 பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diwali

சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்இயக்கப்படுகின்றன.


1 ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

2 வேலூர், காஞ்சீபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

3  திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

4 தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ‘மெப்ஸ்’ பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

5 கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

6 மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.