திடீர் ரெய்டுக்கு யார் காரணம்.? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!

திடீர் ரெய்டுக்கு யார் காரணம்.? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!


sp velumani talk about raid

நேற்று காலை கோவை குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புள்ள 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். எஸ் பி வேலுமணியுடன் குற்றம்சாட்டப்பட்ட கேசிபி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில், திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை தான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை என்று, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளார். 


அவரது ட்விட்டர் பதிவில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.