குட் நியூஸ் சொன்ன எம்.ஈ.டி: வருது வருது ஹேய் வருது வருது!! மழை திரும்ப வருது..!

குட் நியூஸ் சொன்ன எம்.ஈ.டி: வருது வருது ஹேய் வருது வருது!! மழை திரும்ப வருது..!



Southern districts and Cauvery delta districts are likely to receive rain due to variation in wind speed.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளாது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 32-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.