நர்சரி கார்டனில் கொல்லபட்டு கிடந்த முதியவர்.! அம்பலமான மகனின் பலே நாடகம்! எல்லாம் இதற்காகதானா...son-killed-father-for-land

சென்னை குன்றத்தூர் அருகே பூந்தண்டலம், சக்திநகர் பகுதியில் வசித்து வந்தவர் 70 வயது நிறைந்த தங்கதுரை. இவருக்கு 3 மகன்கள் இருந்தனர். நர்சரி கார்டன் நடத்தி வந்த தங்கதுரை தினமும் இரவில் அங்கேயே தூங்குவது வழக்கம். அவ்வாறு அண்மையில் நர்சரி கார்டனில் தூங்கிய அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் தங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலையில் அவரது மகன் 43 வயது நிறைந்த ராபின்சன்க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கொலை நடந்த அன்று தான் ஈஸ்டர் பண்டிகைக்காக குடும்பத்துடன் சர்ச்க்கு சென்றாக கூறி அங்கு எடுத்த புகைப்படங்களை காட்டியுள்ளார்.

Murder

இதனால் குழப்பத்தில் இருந்த போலீசார்கள் நர்சரி கார்டனுக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நள்ளிரவில் ராபின்சன் அங்கு சென்றதை கண்டறிந்துள்ளனர். இதனை ஆதாரமாக வைத்து அவர்கள் விசாரித்ததில், ராபின்சன் அண்ணன் டென்னிஸ் ராஜ் இறந்துபோன நிலையில் அவரது நிலத்தை தந்தை தங்கதுரை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பிளான் போட்டு தந்தையைக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் நள்ளிரவில் நர்சரி கார்டனுக்கு வந்த அவர் குடிபோதையில் படுத்திருந்த தனது தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் ராபின்சனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.