புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மருந்து வாங்க மெடிக்கலுக்கு சென்ற தந்தைக்கு நிகழ்ந்த சோகம்... மகனால் அம்பலமான உண்மை!!
கர்நாடக மாநிலம், பெங்களூரு குட்டஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. சர்க்கரை நோயாளியான இவர் மருந்து வாங்குவதற்காக இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது இடையே ஸ்கூட்டரிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி கிருஷ்ணப்பா குடும்பத்திற்கு அழைப்பு வந்துள்ளது.
மேலும் போலீசாரும் கிருஷ்ணப்பா ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என வழக்கை முடித்து கிருஷ்ணப்பாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர். ஆனால் அவரது மகனுக்கு தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவினை ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையடுத்து கிருஷ்ணப்பாவின் மகன் சதிஷ் குமார் இது தொடர்பாக கடந்த 17 ஆம் தேதி வயாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சர்ஃபரஸ் என்ற மெக்கானிக் தான் கிருஷ்ணப்பாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சர்ஃபரஸ் தான் கிருஷ்ணப்பாவின் ஸ்கூட்டரை பின்னாலிருந்து தனது வண்டியால் இடித்துள்ளார். அதில் கிருஷ்ணப்பா நிலை தடுமாறியதால் சர்ஃபரஸை, கிருஷ்ணப்பா கடுமையாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்ஃபரஸ் கிருஷ்ணப்பாவை கடுமையாக தாக்கியது மட்டுமின்றி அவரின் தலையில் கல்லால் ஓங்கி அடித்துள்ளார்.
அதில் தான் கிருஷ்ணப்பா இறந்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் சர்ஃபரஸ். இதனையடுத்து போலீசார் சர்ஃபரஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.