பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் போலீசில் புகார் அளித்த மகன்!Son complaint against parents for not marriage

சேலம் அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் மகன் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்த புகாரில் தனக்கு 20 வயதாகிறது என்றும், ஆனால் தனது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

marriage

இதனையடுத்து போலீசார் இளைஞரின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது பெற்றோர் எங்கள் மகன் இதுவரை எந்த வேலைக்கும் செல்லவில்லை. இருசக்கர வாகனம் வாங்கினால் வேலைக்கு செல்வேன் என கூறினார். இதை நம்பி நாங்களும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் வேலைக்கு செல்லவில்லை.

எனவே அவருக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்று யோசித்து வருவதாக பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த இளைஞரிடம் பேசிய போலீசார் வேலைக்கு போகவில்லை என்றால் பெண் வீட்டில் எப்படி திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.

marriage

மேலும் முதலில் வேலைக்கு சென்று நல்ல பையனாக இரு, அதன் பின்னர் உன்னை தேடி பெண் கொடுப்பார்கள் என போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். இந்த புதிய புகாரால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.