அரைக்காணி நிலத்திற்காக பெற்றெடுத்த தந்தையை நடுரோட்டில் உருட்டுக்கட்டையால் பொளந்துகட்டிய மகன்..!! 

அரைக்காணி நிலத்திற்காக பெற்றெடுத்த தந்தையை நடுரோட்டில் உருட்டுக்கட்டையால் பொளந்துகட்டிய மகன்..!! 


son attacked his father

 

கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் ஆரம்ப காலத்திலேயே தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கும் சரிக்கு சமமாக பிரித்துக்கொடுத்து, கடைசி காலத்திற்காக சிறிய அளவிலான சொத்தை மட்டும் தன் கைவசப்படுத்தி வைத்துள்ளார். 

இந்நிலையில் அவரது மகன் ஜாக்சன் துரை, ராதாகிருஷ்ணன் வைத்துள்ள எஞ்சிய சொத்தையும் தனக்கு எழுதி தரும்படி கேட்டு தகராறு செய்துவந்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, சம்பவத்தன்று ஜாக்சன்துரை உறவினர் ஒருவருடன் தந்தையின் வீட்டிற்கு வந்து தன்னை பெற்றெடுத்த தந்தையை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். 

Cuddalore District

இதில் அவர் சாலையில் வலியால் கத்திய நிலையில் காண்போர் அதனைகண்டு பெரும் சோகத்திற்குள்ளாகினர். பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்து ஜாக்சன் துரையை தேடிவருகிறார்கள்.