மனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இளைஞனின் மோசமான செயல்!

மனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இளைஞனின் மோசமான செயல்!


Someone who morphed and misrepresented the image of the wife

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தினை முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், அவர் மனைவியின் புகைப்படத்தை மட்டும் தவறாக சித்தரித்து, மார்பிங் செய்து வேறொரு பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இதனைப்பார்த்த அந்த பெண்ணின் கணவர், மேற்கண்ட முகநூல் பக்கத்தின் அட்மினை தொடர்பு கொண்டு படத்தை நீக்குமாறு கூறியுள்ளார். 

இதையடுத்து அந்த புகைப்படம் உடனடியாக நீக்கப்பட்டு, மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் அவர் உடனடியாக இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக கூற, உடனே அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவோம் என்றும், மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் இன்னும் சில படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

fb

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் மயிலாடுதுறையை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சிவா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவா ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதும், மயிலாடுதுறையில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனதும் தெரியவந்தது.

முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரித்து தனது போலியான பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு மிரட்டுவதை சிவா வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.