தமிழகம்

# Breaking முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு ஒருவர் தீக்குளிப்பு..! அதிர்ச்சி காரணம்.!

Summary:

# Breaking முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு ஒருவர் தீக்குளிப்பு..! அதிர்ச்சி காரணம்.!

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் முக ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ளது. நந்தனம் முத்துராமலிங்க தேவர் சாலை, கோட்டூர்புரம் செல்லும் சாலை என இணையும் முக்கியமான பகுதியில் முதல்வரின் வீடு அமைந்துள்ளதால் அங்கு எப்போதுமே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர்  திடீரென வந்து தன் கையில் வைத்திருந்த  மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றி  தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவர் மீது தீ பற்றியதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து தீக்காயம் ஏற்பட்ட அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளிப்பில் ஈடுபட்ட நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக பிரமுகர் வெற்றிவேல் என்பது தெரியவந்தது. இவர், உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதையடுத்து சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரை  வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி முதல்வர் இல்லம் முன்பு தீக்குளித்துள்ளார்.


Advertisement