அலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர்! கொலையா? தற்கொலையா?

அலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர்! கொலையா? தற்கொலையா?


software-engineer-died

சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் திருப்பூரை சேர்ந்த பிரபு என்பவர் பணிபுரிந்து வந்தார். சாப்ட்வேர் என்ஜினீயரான அவர் நேற்று பணியில் இருக்கும்போது, திடீரென்று நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

பிரபு கீழே விழுந்ததில் கை, உடல் முறிந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை, சக பணியாளர்கள் மீட்டு, நிறுவன ஆம்புலன்ஸ் மூலம், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரபுவின் சக பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரபு பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.