ஏசிக்குள் இருந்து திடீரென கேட்ட சத்தம்!! எட்டி பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஏசிக்குள் இருந்து திடீரென கேட்ட சத்தம்!! எட்டி பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!


Snake found in AC TamilNadu viral video

கடலூரில் வீட்டின் ஏசிக்குள் சாரைப்பாம்பு குடியிருந்த தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது கடலூர் அருகே உள்ள செம்மண்டலம் பகுதியில் நடந்துள்ளது. இந்த பகுதியில் வசித்துவரும் அரவிந்த் என்பவரின் வீட்டில் இருக்கும் ஏசியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. சந்தேகப்பட்டு அரவிந்த் ஏசியை பார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

சாம்பு தோலுரித்த சட்டை ஏசிக்குள் இருப்பதை பார்த்த அரவிந்த் பதறிப்போய், பாம்பு பிடி வீரரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த செல்லா, ஏசியை கழற்றி பார்த்தபோது, உள்ளே சாரைப்பாம்பு இருந்தது இருந்துள்ளது.

உடனே பாம்பை லாவகமாக பிடித்து அகற்றியுள்ளார். மேலும் ஏசிக்கு வெளியே உள்ள அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப்லைன் அமைக்க போடப்பட்டிருக்கும் ஓட்டை அடைக்காமல் இருந்ததால், பாம்பு உள்ளே புகுந்திருக்கும் என்று செல்லா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வீட்டில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.