இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம்; பணம் கேட்டு மிரட்டிய ஆசாமி கைது.

இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம்; பணம் கேட்டு மிரட்டிய ஆசாமி கைது.


skylink-technologies

 சென்னையை அடுத்த தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோடு 100 அடி சாலையில் தனியார் கன்சல்டிங் நிறுவனத்தை கார்த்திக்ராஜா 36 என்பவர் நடத்தி வந்தார்.

தாம்பரம்

இந்நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் வேலை வாங்கி தரவும் நிறுவனங்களில் வேலை செய்ய பயிற்சியும் அளிக்கபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சி ஓலையூர் கே.கே நகரை சேர்ந்த ரம்யா என்ற பி.இ பட்டதாரிப் பெண் பயிற்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார்.

தாம்பரம்

அந்த பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்த கார்த்திக்ராஜா, அதை இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி 1 லட்சம் பணம் கேட்டுள்ளார். 

தாம்பரம்

இது தொடர்பாக ரம்யா சேலையூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, சேலையூர் போலீசார் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கார்த்திக்ராஜவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.