#Breaking News: சாத்தூரில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி.!
சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் பகுதியில் பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணன் எனபவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
பட்டாசு ஆலை வெடித்து விபத்து:
இதனிடையே, இன்று பட்டாசு ஆலை திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, பட்டாசு ஆலை வெடித்து சிதறியதால் 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் வடமாநில தொழிலாளர்களாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
File Pic
அதிகாரிகள் விசாரணை:
அவர்களின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி பட்டாசு ஆலை நடத்தி வந்ததால் இடத்தின் உரிமையாளர், பட்டாசு ஆலையை நடத்தி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.